Sermons

உன்னதப்பாட்டு 3 : 7

"இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.”

சாலொமோனுடைய மஞ்சம் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய இராஜரீக இருக்கையைக் குறிப்பிடுகிறது. சாலொமோன் என்ற பெயரின் கீழ் இயேசு கிறிஸ்துவை புரிந்து கொள்வது கடினம் அல்ல, ஏனென்றால் வேதத்திலே இயேசு கிறிஸ்துவை தாவீதோடு ஒப்பிட்டு கூறப்பட்டிருக்கிறது. எரே 30 : 9 மற்றும் எசே 34 : 23 ,ல் இயேசு கிறிஸ்துவை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு இயேசு கிறிஸ்து என்ற பெயர் வெளிப்படுத்தப்படாததினாலும், தாவீதின் வம்சத்திலிருந்து வருகிறவர் என்று தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருக்கிற காரணத்தினாலும் இயேசுகிறிஸ்துவிற்கு  தாவீது என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இந்த உன்னதப்பாட்டில் வரும் சாலொமோன் என்ற பெயர் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.

"அறுபது சவுரியவான்கள்” ஆறு என்பது மனிதனைக் குறிக்கிறது, பத்து என்பது நிறைவைக் குறிக்கிறது. இங்கு அறுபது என்று நிறைவான ஒரு போர் சேனையைக் குறிப்பிடுகிறது. சவுரியவான் என்பது யுத்தத்திற்கு செல்பவர்களை குறிக்கும் ( பிரசங்கி 9 : 11 ). அந்த சேனை என்பது மணவாட்டி, தோழர்கள் மற்றும் தோழிகளை குறிக்கும். வெளி 20 : 4 ,ல் இவர்கள் இயேசு கிறிஸ்துவோடு ஆயிரம் வருடம் அரசாட்சி செய்வதை வேத வசனம் குறிப்பிடுகிறது. இயேசு கிறிஸ்து அரசாட்சியில் அவர் இராஜரீக இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது அவரை சுற்றிலும் இந்த சேனை நின்றுகொண்டிருக்கும். இதைத் தான் இந்த வசனம் குறிப்பிடுகிறது.

கிறிஸ்துவின் சேனை என்ற பாக்கியத்தைப் பெறுவோம்.

குறிப்பு வசனம்: 1,ராஜா 9: 22, 1,ராஜா14: 27-18, 1,ராஜா 10: 26, எபிரெயர் 1: 14, சங் 68: 17,   வெளி 19:14

Loading...