Sermons

உன்னதப்பாட்டு 3 : 4

"நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்து போனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.”

இரகசிய வருகைக்குப் பின்னர் கிறிஸ்துவின் நேசத்தால், இழுக்கப்பட்டு வாழ்கின்ற ஜனங்களின் நிலை மிகவும் சிரமமாக இருக்கும். மிருகம் என்று அழைக்கப்படும் அந்திக்கிறிஸ்து பரிசுத்தவான்களுடன் போராடி மேற்கொள்ளுவான் (வெளி 13 : 7).

மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளும்படி கைவிடப்பட்ட சபை மற்றும் உலக மக்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள். மிகுந்த உபத்திரவம் உண்டாகும். பலர் பின்வாங்கி விடுவார்கள். அநேகர் கிறிஸ்துவின் மீது உள்ள நேசத்தால் அவருக்காக வைராக்கியமாக இருந்து இரத்தசாட்சிகளாய் மரித்து, மணவாட்டிகளின் தோழிகளாக்கப்படும் ஒரு கூட்டம் மக்கள் உண்டு. அவர்கள் ஆத்தும நேசரைக் கண்டு அவரோடு இருப்பார்கள். ரோமர் 11 : 26-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல அனேக யூதர்கள் இரத்தச்சாட்சியாய் மரித்து மீட்கப்படுவார்கள். ஆனால் அந்நாட்களில்  மனந்திரும்பி இரட்சிக்கப்படுதல் கிடையாது.  ஏனென்றால், அது ஒரு இருண்டக் காலம் (அந்திக்கிறிஸ்துவின் காலம்)  யாரும் கிரியை செய்ய முடியாதக் காலம். 

"அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.”  இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த  நேசத்தால், அவருக்காக இரத்தச்சாட்சியாய் மரித்து இப்பொழுது அவரோடு இருக்கிறவர்கள் தான் மணவாட்டியின் தோழிகள். அவர்கள் இங்கே கூறுகிறார்கள் அவரை நான் விடாமல் பற்றிக்கொண்டேன். அதாவது, அந்திக்கிறிஸ்துவின் காலத்திலும் அவர்மேல் வைத்த நேசத்தால் அவரை விடாது பற்றிக்கொண்டு அவருக்காக இரத்தசாட்சியாய் மரித்து மீட்கப்பட்டு அந்த பாக்கியத்தை பெற்றுக்கொண்டேன் என்கிறார்கள். 

அன்பானவர்களே!  இந்த வசனம் உபத்திரவக் காலத்தில் இரத்தசாட்சியாய் மரித்து மணவாட்டியின் தோழி அந்தஸ்தை பெறுகிறவர்கள் பேசுவது. அவர்கள் கிறிஸ்துவின் மீது இருந்த நேசத்தால் இரத்தச்சாட்சியாய் மரித்து, மீட்கப்பட்டு, கிறிஸ்துவோடு சேர்ந்து, ராஜாவினுடைய அறையில் போய் (தாய் வீடு)  சேருகிற பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.

எந்த சூழலிலும் கிறிஸ்துவைக் கண்டடைவோம் என்ற விசுவாசம் இருக்கிறதா?

குறிப்பு வசனம்: நீதி 8: 17, எரே 29: 13, புலம்பல் 3: 25, மத் 7: 7, சங் 145: 18, யோவான் 20: 11-16


Loading...