Sermons

உன்னதப்பாட்டு 3 : 1

கடைசி ஏழு வருடக் காலம்

கைவிடப்பட்ட சபை பேசுவது :

"இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.”

"இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்;” இராக்காலம் என்பதை ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது, சபையாகிய சிலர் கைவிடப்பட்டதையும், கிருபையின் காலம் முடிவு பெற்றதையும் கூறுகிறது. இயேசு கிறிஸ்து கிரியை செய்யக்கூடாதக் காலம் இராக்காலம் என்று கூறுவதை யோவான் 9 : 4 ,ல் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவே இந்த வசனத்தில் குறிப்பிடுகிறார்; பகல் காலம் இருக்கும் மட்டும் தான், நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும். இராக்காலத்தில் ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என்பதாக குறிப்பிடுகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் கிருபையின் காலம் முடிவுற்ற நிலையில், சபை கர்த்தருக்கு தன்னுடைய இருதயத்தில் இடம் கொடுக்க ஆயத்தமாகுகிறது.

"என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்”  இங்கே படுக்கை என்பது ஆவிக்குரிய நிலையில் உற்சாகம் இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது. இங்கே கைவிடப்பட்ட கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவைத் தேடுகிறார்கள். ஒரு துன்பத்தின் படுக்கையில் அல்லது ஒரு பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் தேடுவதாக பார்க்கலாம் (ஏசாயா 26 : 16, ஓசியா 5 : 15).  இங்கே சபை குளிர்ந்த, மந்தமான, சோம்பேறித்தனமான முறையில் அவரைத் தேடி வெற்றிபெறவில்லை என்பதை இது காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் சபை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதைத்தெரியாத கைவிடப்பட்டவர்கள் , அவரைத் தேடுகிறார்கள்; ஆனால் அவரைக் கண்டு கொள்ள முடியவில்லை அவர் போய்விட்டார். 

"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்” என்று (ஏசாயா 55 : 6) ,ல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தின்படி கர்த்தரைக் காண முடியாத ஒரு காலம் வரும். கைவிடப்பட்டவர்கள் அப்பொழுது கர்த்தருடைய வார்த்தையை நினைவுகூர்ந்து பார்ப்பார்கள். அவர் சொன்ன வார்த்தையால் அவருடைய ஆத்துமா சோர்ந்து போகும். அப்படி அவர் என்ன சொன்னார்? இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று சொல்லப்பட்டிருக்கிறது. (1தெச 5:2, மத்தேயு 24: 42-44). இந்த வார்த்தை இன்று கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும். இன்று வாழ்கிற நாம் ஒவ்வொருவருமே கர்த்தரைக் கண்டடையத்தக்க ஒரு நல்ல சமயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். "தேடியும் நான் அவரைக் காணவில்லை”  எப்படியாவது அவரிடம் சேர்ந்து விட வேண்டும் என்று அவரைத் தேடிப் பார்க்கிறார்கள் அவரைக் காணவில்லை. ஜெபத்திலே காத்திருக்கிறார்கள் எந்தப் பதிலும் இல்லை. அவர்களுக்கு மறுஉத்தரவு கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் கைவிடப்பட்டவர்கள். வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற காரியம் தான் இது.  மறு உத்தரவு கிடைக்கிற இந்த நாட்களை நாம் பயன்படுத்திக் கொள்வோம். மறுஉத்தரவு கிடைக்காத ஒரு காலம் உண்டு என்பதை ஆண்டவர் நமக்கு இன்று உணர்த்துகிறார். நாம் எச்சரிக்கையாக செயல்படுவோம்.

அன்பானவர்களே! கிருபையின் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற நாம் இந்த நாட்களை பயன்படுத்திக் கொள்வோம். கர்த்தரிடம் கிட்டிச் சேர்கிற அருமையான நல்ல நாட்களில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சபை எடுத்துக் கொள்ளப்பட்டப்பிறகு தேடினாலும் அவரைக் காண முடியாது. ஒரு இருண்ட காலம் வரப்போகிறது. இதை ஆண்டவர் நமக்கு வேத வசனத்தின் மூலமாக எச்சரிக்கையாக நமக்கு சொல்கிறார். அவருடைய மணவாட்டியாக நாம் ஆயத்தமாவோம்.

நீங்கள் ஆவிக்குரிய நிலையில் உற்சாகமாக இருக்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  சங் 4: 4, சங் 22: 2,ரோமர் 13: 11, எபேசி 5: 4, யோபு 23: 8, 9, சங் 30: 7, சங் 130: 

Loading...