எடுத்துக்கொள்ளப்பட்ட சபைபேசுகிறதாவது
"என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.”
பூமியிலே ஏழு வருடம் உபத்திரவம் நடந்து கொண்டிருக்கிறது, எடுத்துக்கொள்ளப்பட்ட சபை கல்யாணத்துக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற அந்த வேளையில் சபை கூறுகிறதாவது மணவாளனாகிய கிறிஸ்து என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள் (எரேமியா 8:10). இயேசு கிறிஸ்து எடுத்துக்கொள்ளப்பட்ட சபையாகிய லீலி புஷ்பத்துக்குள்ளேயே உலாவிக் கொண்டு, எங்களோடு அவர் உறவாடி கொண்டிருக்கிறார். லீலிபுஷ்பம் என்பது கிறிஸ்துவையும் குறிக்கும் சபையையும் குறிக்கும் (உன்னதப்பாட்டு 2 : 1,2). அவருடைய அன்பு எங்களை மகிழ்விக்கிறது என்று சந்தோஷத்தில் சபை பாடுவதாகும். உண்மையாக இயேசு கிறிஸ்துவுக்குள் கனிகொடுத்து வாழ்கின்ற அவருடைய பிள்ளைகள் ஒரு நாள் நிச்சயமாக இந்த சந்தோஷத்தை அனுபவிப்பார்கள் என்று சத்திய வசனம் கூறுகிறது.
இந்த நாட்களுக்காக உங்கள் உள்ளம் ஏங்குகிறதா?
குறிப்பு வசனம்: சங் 63 : 1