Sermons

நம்பிக்கையுடன் வழிநடத்துதல்

"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்" (நீதிமொழிகள் 3:5-6).

ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்றால் நமக்கு அநேக நேரங்களிலே அநேக சந்தேகங்கள் வரும். இப்படி செய்யலாமா அல்லது அப்படி செய்யலாமா என்ற கேள்வியோடு இருப்பது மனிதர்களின் வழக்கம். அநேகர் தங்கள் மன விருப்பத்தின்படி செய்து அதில் தோல்வி அடைவதும் உண்டு.

உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து அவரை நினைத்து ஒவ்வொன்றையும் செய்கின்றபொழுது, நம் பாதைகளை அவர் செவ்வைப்படுத்துவார் என்று வேதம் சொல்கிறது.

இன்றைக்கு அநேகர் தங்கள் வாழ்க்கையை வாழ்வது கடினம், ஏன் இந்த வாழ்க்கை வாழ்கிறேன் என்று புலம்பிவாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கர்த்தரை நம்பிக்கையாகக் கொண்டு நடக்கிற மனிதனுக்கு இந்தப்புலம்பல் தேவையில்லை, அவரில் நாம் நம்பிக்கையோடு இருக்கும்பொழுது நாம் செல்கிற பாதை சரியான பாதை, வெற்றியுள்ள பாதை.

Loading...