Sermons

ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் தேடுங்கள்

"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.” (நீதிமொழிகள் 9:10)

கர்த்தருக்கு பயப்படுகிற பயம் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் இருக்கும் பொழுது தீமையான காரியங்களை செய்ய அஞ்சுவார்கள். எனவே பொல்லாப்புக்கும் தீமைக்கும் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதேபோல பரிசுத்தரே அறிகிற அறிவில் (அதாவது கர்த்தரை அறிகிற அறிவு ) நாம் வளர்கிற பொழுது நாம் நம்மை தாழ்த்தி நடப்போம்.  கிறிஸ்துவினுடைய உன்னதமான அந்த ஆச்சரியமான மகிமையை நாம் பார்க்க பார்க்க அந்த உயர்வான ஆண்டவரை நாம் பார்க்க பார்க்க நான் நம்மை தாழ்த்தி கர்த்தருக்கு பிரியமுள்ள வழியிலேயே வாழ முடியும்.

உலகம் உங்களை வழிதவறச் செய்யக்கூடிய சோதனைகளாலும் கவனச்சிதறல்களாலும் நிறைந்துள்ளது. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும், அவருடன் ஆழமான உறவை வளர்த்துக் கொள்வதன் மூலமும் ஞானத்தையும் புரிதலையும் தேடுங்கள். இது ஞானமான முடிவுகளை எடுப்பதிலும், கடவுளை மகிமைப்படுத்தும் வாழ்க்கையை வாழ்வதிலும் உங்களை வழிநடத்தும்.

Loading...