Sermons

குறைவுகளில் நேசித்தல்

சவுல் தன் ராஜ பொறுப்பை நன்றாகத் தொடங்கினான்  அவனுடைய முடிவோ துக்கமானதாக மாறியது.  எல்லாருடைய தோளுக்கும் உயரமாக இருந்தவன், கில்போவா மலைமேட்டில் தன் கிரீடத்தை விடாப்பிடியாக பற்றிக்கொண்டவனாக சரிந்து விழுந்தான். பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் நமக்குத் திருஷ்டாந்தங்களாகச் சொல்லப்பட்டுள்ளன.

“இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” (1 கொரிந்தியர் 10:12) என்று பவுல் நம்மை எச்சரிக்கிறார். நாம் இயல்பாய் பெற்றிருக்கிற திறமைகளும், அதன்பொருட்டு பெற்ற அதிகப்படியான வாய்ப்புகளும் நாம் தொடர்ந்து வெற்றியாளர்களாக வலம் வருவோம் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதையே சவுலின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. அவனுடைய தலை எல்லாரைக் காட்டிலும் உயரமாக இருந்தாலும், அவனுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக வளைந்துகொடுக்காவிட்டால் அதினால் பயன் ஒன்றும் இல்லை.

Loading...