Sermons

உயிருள்ள வார்த்தை

நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, 11 நாளா -34:19. (ref 11 நாளா 34:14-33)

ழகானதோர் பசுமையான புல்வெளி, புல்வெளியில் நடக்காதீர் என்றதோர்  பலகை அங்கு வைக்கப்பட்டிருந்தது. அங்கு வருவோர் போவோர் அந்த அறிவிப்பைப் பர்த்தனர். ஆனாலும், அந்தப் புல்வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.எதைச் செய்யக் கூடாது என்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தும், அதனைச் செய்யாமலிருக்கும் உணர்வு  ஏற்படவில்லை. சற்று நேரத்தில் அந்தப் புல்வெளியைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு மனிதன் அங்கு வந்தான். அவன் எதையும் வாயினால் பேசவில்லை, ஆனால் அறிவிப்பு பலகையை எடுத்துக்கொண்டு அதனை எல்லோருக்கும் காண்பித்தான் அவ்வளவுதான், புல்வெளியில் நடந்து கொண்டிருந்த நபர்கள் எல்லோரும் வெளியே வந்து விட்டனர்.

வேதாகமத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் நாம் எதைச் செய்யலாம். எதைச் செய்யக்கூடாது என்பதை நாம் அறிந்து கொள்ளச் செய்கிறது.  ஆனாலும், அதன்படி நம்மால் வாழ இயலவில்லை. அவ்விதம் மகிழ்வதற்குத் தேவையான உந்து விசை கிடைக்காமல் போகிறது. ஆனால், அதே வேத வார்த்தைகளை தேவ ஆவியானவர் நமக்குள் சுட்டிக்காட்டும் போது. நாம் உணர்த்தப் பட்டு அவ்விதம் வாழ்வதற்கான உந்துதலைப் பெறுகின்றோம்.

அநேகர் வேதாகமத்தை மிகுதியாகப் படித்து, தேவனுடைய விருப்பங்களை நன்கு அறிந்து கொள்கின்றனர். எது சரி, எது தவறு என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும், அவற்றின்படி வாழ்வதில்லை. ஏனென்றால், அவை தேவனுடைய வாயிலிருந்து ஏற்கெனவே புறப்பட்ட வார்த்தைகள். ஆனால், என்றோ அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் அல்ல. இன்று அவருடைய வாயிலிருந்து புறப்படுகின்ற வார்த்தைகள்தான், நமக்குள் அவற்றைப் பின்பற்றும் ஒரு வல்லமையான உணர்வைத் தரும்.

தேவன் ஏற்கெனவே பேசிய வார்த்தைகளை இன்று அவருடைய ஆவியினால் உயிர்ப்பித்து நமக்குள் அனுப்பும் போது, அது ஜீவனுள்ள வார்த்தையாக மாறுகின்றது. அதனால் மாற்றங்கள் நிகழுகின்றது. ஆம், நமக்கு வேதப் புத்தகமும் அதைப் படித்து, எது சரி எது தவறு என அறியும் பழக்கம் மட்டும் போதாது. தேவ ஆவியினால் வார்த்தைகளை உயிருள்ளவைகளாக உணர்ந்து பின்பற்றும்படியான ஆவிக்குரிய மறுபிறப்பின் அனுபவம் வேண்டும்.

Loading...