அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்திலிருந்து ஜெபத்தை குறித்து சற்று ஆழமாக பார்ப்போம். நம்முடைய முந்தைய பாடங்களில் ஆதி திருச்சபை செய்த ஜெபத்தை குறித்தும் அப்போஸ்தலர்கள் செய்த ஜெபங்களைக் குறித்தும் கற்றுக்கொண்டோம். ஆனால் அப்போஸ்தலர் புஸ்தகம் சபையாக எறெடுக்கப்பட்ட ஜெப கூட்டங்களை குறித்து பதிவு செய்கிறது. "ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (அப்போஸ்தலர் 2:42).
கிரேக்க மொழியில் ஜெபத்தை குறித்து பயன்படுத்தப்பட்ட 'ப்ரோஸ்கர்டேரியோ' (proskartereo) என்கிற வார்த்தை ஊக்கமுடன் (to be earnest towards), சிறத்தையுடன் (to attend assiduously), உடனுக்குடன் (be instant in) என்று அர்த்தங்கொள்ளும்.
ஜெபம் குறித்த வார்த்தைகள் (prayer, prayers, prayed, praying and pray) அப்போஸ்தலர் புஸ்தகத்தில் 29 முறை காணப்படுகின்றன. (அப் 1:14,25, அப் 2:42, அப் 3:1, அப் 4:31, அப் 6:4,6, அப் 8:16,22,24, அப் 9:40 அப் 10:2,4,9,30,31, அப் 11:5, அப் 12:5,12, அப் 13:3, அப் 14:23, அப் 16:13,16,25, அப் 20:36, அப் 21:5, அப் 22:17, அப் 28:8).
சபை இணைந்து ஜெபித்த முதல் குறிப்பு அப்போஸ்தலர் 1:14. அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். அப்போஸ்தலனாகிய லூக்காவின் குறிப்புப்படி ஆதி திருச்சபை ஜெபிப்பதற்காக கூடியது மட்டுமல்லாது, ஜெபம் அவர்களுக்கு ஒரு சடங்காக இருக்கவில்லை. மாறாக அவர்களுடைய வாழ்வோடு ஒன்றியிருந்தது! வாழ்க்கை முறையாகவே இருந்தது.
ஆதி திருச்சபை இரண்டு ஜெபங்களை ஏறெடுத்தனர் என்று வசனங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அப்போஸ்தலர் 1:23-26,
அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,
இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
யூதாசுக்கு பதிலாக வேறொருவரை தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் சேர்ந்து ஜெபித்து அவர்களின் முறைமையின்படி சீட்டு போட்டார்கள், இந்த முறைமை பெந்தேகொஸ்தே வழக்கத்திலிருந்தது.
அப்போஸ்தலர் 4:23-31
அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.
அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,
கர்த்தருக்கு விரோதமாகவும், தேவனுடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.
இப்பொழுதும், கர்த்தாவே அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
அவர்கள் ஜெபம்பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள்.
அவர்கள் எதற்காக ஜெபித்தார்கள் என்று நாம் ஆராய்ந்து பாப்போம்.
அப்போஸ்தலர்கள் அடிக்கப்பட்டு, தொடர்ந்து இந்த காரியங்களில் ஈடுபட்டால் கடுமையான துன்பங்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டனர். துன்பங்களிலிருந்து விடுதலை வேண்டும் என்று ஜெபிப்பதற்கு பதிலாக தங்களுக்கு இன்னும் அதிக தைரியம் வேண்டும் என்று ஜெபித்தார்கள்.
இந்த
ஜெபம் இன்றைய சபை வாழ்விலும் நெருக்கமான தொடர்புடையது. காரணம் பின்வரும் காரணங்களினால்:
1. யாரிடம் இந்த ஜெபம் ஏறெடுக்கப்பட்டது, அப்போஸ்தலர் 4:24 ஆம் வசனம் ஆதி திருச்சபை கர்த்தரின்பேரில் கொண்டிருந்த தெளிவை விளக்குகிறது. கர்த்தரிடம் ஜெபிக்கிறார்கள் என்பது அவர்கள் கர்த்தரிடத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தில் தெரிகிறது.
2. யார் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறார்கள் என்பதால் இன்றைய சபைக்கு தொடர்புடையது. நெருக்கமான அப்போஸ்தலர்களுக்கு ஆண்டவர் கொடுத்த தெளிவான அழைப்பு சுவிசேஷத்தை பிரசங்கித்தல். தங்களோடு எப்பொழுதும் இருப்பேன் என்று வாக்கு கொடுத்த ஆண்டவரின் அழைப்பை அவர்கள் நிறைவேற்றி கொண்டிருந்தனர்.
3. இன்றைய சபைக்கு ஏறெடுக்கப்பட்ட ஜெபம் தொடர்புடையது. சூழ்நிலையாலும் நெருக்கமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும் ஓர் ஊனமான மனிதனை குணப்படுத்தினார்கள். மத தலைவர்கள் இப்படிப்பட்ட அற்புதத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுகொள்ளாமல் அப்போஸ்தலர்களை துன்புறுத்தி ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தை பிரசங்கிக்காதபடி எச்சரித்தனர்.
4. இன்றைய சபைக்கு ஏறெடுக்கப்பட்ட ஜெபம் நெருக்கமான தொடர்புடையது. அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஜெபிக்கவில்லை. பாடுகள் நின்றுபோக வேண்டும் என்றும் ஜெபிக்கவில்லை. மாறாக ஆண்டவருடைய அழைப்பை தங்கள் வாழ்விற்கு முன்னதாக வைத்தனர். தங்களுக்கு தைரியம் பெருக வேண்டும் என்று ஜெபித்தார்கள்.
5. ஜெபத்திற்கு பதில் கிடைத்ததால் இன்றைய சபைக்கு நெருக்கமான தொடர்புடையது அப்போஸ்தலர் 4:31 ஆம் வசனம், அந்த இடம் அசைந்து யாவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். மட்டுமல்லாமல் அவர்கள் மிகுந்த தைரியத்தோடும் பேசினார்கள். என்ன ஒரு அற்புதமான ஜெபத்தை ஆதி திருச்சபையினர் ஏறெடுத்துள்ளனர்!
எதற்காக
ஆதி திருச்சபையினர் ஜெபித்தார்கள்?
1. தங்கள்
தலைவர்களுக்காக
அப்போஸ்தலர் இருதயங்களையும் அப்போஸ்தலர் 1:24. இவ்விரண்டு பேரில் தெரிந்துகொண்டவனை தேவரீர் எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணினார்கள்.
"அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்" (அப்போஸ்தலர் 6:6).
"அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்" (அப்போஸ்தலர் 14:23).
மேற்கண்ட வசனங்களில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது சபையார் அனைவரும் கூடி தேவனுடைய ராஜ்ஜியத்தில் அந்த தலைவர்களின் செயல்பாடுகளுக்காக ஜெபித்தனர். அப்போஸ்தலர்கள் அவர்கள் தலைகளில் கைகளை வைத்து அவர்களின் ஊழியத்திற்காக பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளும்படி ஜெபித்தார்கள்.
2. பரிசுத்த
ஆவியை பெற்றுக்கொள்வதற்காக
"அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி" (அப்போஸ்தலர் 8:16).
3. பாவிகள்
மனந்திருபுவதர்க்காக
"ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்" (அப்போஸ்தலர் 8:22).
"அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்" (அப்போஸ்தலர் 8:24).
"அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல. இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்" (அப்போஸ்தலர் 26:29).
4. ஊழியத்திற்கு அனுப்பும்போது
"அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்" (அப்போஸ்தலர் 13:3).
"இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்"(அப்போஸ்தலர் 20:36).
அப்போஸ்தலர் 27:29 ஆம் வசனத்தை சில மொழிபெயர்ப்புகள் ஜெபம் என்று குறிப்பிடுகின்றன ஆனால் அது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமே. இரண்டு முறை மாத்திரமே இது ஜெபம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அனால் KJV மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் இதை சரியாக மொழிபெயர்த்திருக்கின்றன.
(பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள். அப்போஸ்தலர் 27:29)
அப்போஸ்தலர் 28:8 ஆம் வசனத்தில் பவுல் ஜெபித்தார் ஆனால் அதன்பின் புபிலியுவினுடைய தகப்பனை குணப்படுத்த்னார்.
(புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். அப்போஸ்தலர் 28:8)
ஆதி
திருச்சபையின் ஜெபத்தின் பலன் என்ன?
1. இடங்கள்
அசைந்தன / பூமி அதிர்ச்சி மற்றும் ஜனங்கள் இரட்சிக்கப்பட்டனர்.
"அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்" (அப்போஸ்தலர் 4:31).
பிலிப்பி பட்டணத்தில் பிசாசு பிடித்திருந்த குறிசொல்லுகிற பெண் விடுவிக்கப்பட்ட பிறகு இது நடந்தது. பவுலும் சீலாவும் நடுராத்திரியிலே சிறைபிடிக்கப்பட்டனர்.
"நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்" (அப்போஸ்தலர் 16:25).
நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான பாடம், அவர்கள் தங்கள் விடுதலைக்காக மாத்திரம் ஜெபிக்கவில்லை. அப்படி ஜெபித்திருப்பர்களேயானால், பூமி அதிர்ச்சியினால் சிறை கதவுகள் திறக்கப்பட்டவுடனே அவர்கள் ஒடிப்போயிருப்பார்கள். இதன் மூலமாகவே பிலிப்பியர் சபை உருவானது. இன்று நமது கைகளில் பிலிப்பியருக்கு எழுதின நிருபம் உள்ளது.
2. அற்புதமான
விடுதலை
"அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்" (அப்போஸ்தலர் 12:5).
பேதுரு சிறையிலிருந்து விடுதலையானாலும், ஜனங்களால் அந்த அற்புதத்தை உட்கொள்ள இயலவில்லை. ஆகவே அவர்கள் பேதுருவின் விடுதலைக்காக ஜெபிக்கவில்லை என்று தெளிவாக தெரிகிறது.
நிறைவுரை:
ஆதி திருச்சபையின் ஜெபங்களின் மூலம் நாம் கற்றுக்கொள்ளகூடிய காரியங்கள்:
1. அவர்கள் எந்த பொருள் ஆசீர்வாதங்களுக்காகவும் ஜெபிக்கவில்லை.
2. அவர்கள் உடல் வியாதிகள் குணமாக ஜெபிக்கவில்லை.
3. அவர்கள் எந்த பண ஆசீர்வாதங்களுக்காகவும் ஜெபிக்கவில்லை.
4. அவர்கள் எந்த ஒரு பாதுகாப்புக்காகவும் ஜெபிக்கவில்லை.
5. கர்த்தர் தங்கள் உலக வாழ்வை காக்கும்படி ஜெபிக்கவில்லை.
மாறாக,
அவர்கள் எவ்வித இன்னல்களிலும் செல்ல தயாராக இருந்தார்கள் அவர்கள் ஜெபித்த காரியங்கள்:
1. மூப்பர்கள், தலைவர்கள், புதிய விசுவாசிகள் மேல் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்காக ஜெபித்தார்கள்.
2. பாவிகள் மனந்திரும்ப வேண்டும் என்று ஜெபித்தார்கள்.
3. ஊழியத்திற்காக ஜெபித்தார்கள்.
4. சபையாக ஒன்று சேர்ந்து உறுதியாக ஊக்கத்துடனே ஜெபித்தார்கள்.
ஆதி திருச்சபையில் பெரும்பாலானோரின் (பேதுரு, பவுல், ஸ்தேவான், கொர்நேலியு, யூத ஸ்திரீ மற்றும் பலரின்) ஜெப பழக்கங்களை காண முடிகிறது. நாமும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு அவர்களைப்போல தொடர்ச்சியாகவும், ஆர்வமுடனும் கர்த்தருடைய காரியங்களுக்காக ஜெபிப்போமா?