தாழ்மை - (MEEKNESS, HUMILITY) என்பது, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடும், மனுஷரிடத்தில் அன்பாகவும் நடந்துகொள்வது.
தேவனே சர்வத்தையும் ஆளுகை செய்கிறவர் என்பதை அங்கீகரித்து மனத்தாழ்மையோடு இருப்பது. மனத்தாழ்மை என்பது பலவீனம் அல்ல, மனத்தாழ்மையும் அன்பும் சேர்ந்திருக்கும் போது அது மிகுந்த தைரியத்தையும் பலத்தையும் கொடுக்கும்.
சபைத்தலைவர்களிடம் மனத்தாழ்மை இருக்கவேண்டும் (கலாத்தியர் 5:22-23, 6:1). தேவனே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறவர் என்பதை உணர்ந்து, துன்மார்க்கரிடமும்கூட தேவமனுஷன் தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்து நாம் மனத்தாழ்மையோடு இருக்கவேண்டும் என்று உபதேசிக்கிறார் (மத்தேயு 5:5, 11:29). கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தாழ்மையை தரித்துக் கொள்ள வேண்டும் (2 கொரிந்தியர் 10:1, கலாத்தியர் 5:23, 6:1, எபேசியர் 4:1-2).
தாழ்மையினால் வரும் ஆசீர்வாதங்கள்:
1. சிருஷ்டியின் மகிமை (லூக்கா 17:10, வெளி 4:11)
2. மீட்பு (பிலிப்பியர் 2:5-8)
3. ஐசுவரியமும், கனமும் (நீதி 15:33, நீதி 22:4, மத்தேயு 5:3)
4. தாவீது (2 சாமுவேல் 7:18-19, 1 நாளாகமம் 17:17)
5. ஐக்கியம் (ஏசாயா 57:15, ஏசாயா 66:2)
6. ஆத்துமாவின் இளைப்பாறுதல் (மத்தேயு 11:29)
7. இரட்சிப்பு (மத்தேயு 18:3, லூக்கா 18)
7. மேன்மை (மத்தேயு 20:26-27, லூக்கா 22:26)
8. உயர்த்தப்படுதல் (மத்தேயு 23:12, லூக்கா 14:11)
9. வெளிப்பாடு (மத்தேயு 11:25, லூக்கா 10:21)
10. ஒற்றுமை (எபேசியர் 4:1-3, எபேசியர் 5:21, 1பேதுரு 5:5)
11. ஜெயஜீவியம் (ரோமர் 12:10,16, 1கொரி 13, கலா 5:26, பிலிப்பியர் 2:1-4, கொலோ 3:5-14, 1யோவான் 4:20, 1தீமோ 1:15, தீத்து 2:11-14)
12. விசுவாசம் (மத்தேயு 8:8, மத்தேயு 15:28, யோவான் 4:50)
தாழ்மையுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள்:
1. ஆபிரகாம் (ஆதியாகமம் 18:27,32)
2. யாக்கோபு (ஆதியாகமம் 32:10-11)
3. மோசே (யாத்திராகமம் 4:10, எண்ணாகமம் 12)
4. தாவீது (2 சாமுவேல் 7:18-19, 1 நாளாகமம் 17:17)
5. யோபு (யோபு 42:4-6)
6. ஏசாயா (ஏசாயா 6:5)
7. நூற்றுக்கதிபதி (மத்தேயு 8:8)
8. யோவான் ஸ்நானன் (யோவான் 3:30)
9. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
10. பவுல் ( எபேசியர் 3:8, 1 தீமோத்தேயு 1:15)
"பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" (1 பேதுரு 5:5).