லூக்கா 23 : 43 இயேசு அவனை நோக்கி இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்.
சிலுவையில் தொங்கி கொண்டிருந்த ஒரு கள்ளன் இயேசுவை நோக்கி உம்முடைய ராஜ்ஜியத்தில் என்னை நினைத்தருளும் என்றான்.
யோவான் 6 : 31 என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. அதன்படி அவர் கள்ளனை நோக்கி சொல்லுகிற வார்த்தை இது. ஆண்டவர் முதல் வார்த்தை சொன்ன பின் மறுபடியும் என்ன சொல்வார் என்று யாருக்குமே தெரியாது.
முதல் வார்த்தைக்கு பின் சத்துருக்கள் எவ்வளவோ தூசித்தார்கள், பரியாசம் பண்ணினார்கள், நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையில் இருந்து இறங்கி வா அப்பொழுது உன்னை விசுவாசிப்போம் என்றார்கள். இயேசு வாய் திருக்கவில்லை
இந்த கள்ளன் இயேசு பார்த்து உம்முடைய ராஜ்ஜியத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும் என்றான். இப்பொழுது மனது உருகி அவனுக்காக இரண்டாம் வார்த்தை பேசுகிறார்.
கடைசி அந்த நேரத்தில் ஒரு குற்றவாளி எல்லாம் வித்தியாசமாக நடப்பதை அறிந்து கொண்டான். இயேசு தனக்காக மரிக்கவில்லை மற்றவர்களுக்காக மரிக்கிறார் என்று அறிந்து கொண்டான்.
பரபாஸ் இடத்தில் இயேசு மரிக்கிறார் என்பதை கண்ட கள்ளன் அவரை தேவன் என்பதை உணர்ந்தான் . இயேசுவின் எல்லா குணங்களையும் அறிந்து கொண்டான். தன்னை துன்பப்படுத்தின மக்களை மன்னிக்க பிதாவினிடத்தில் ஜெபிப்பதை அவன் பார்க்கிறான்.
அவரை அதிகாரிகள், பிலாத்து விசாரிக்கும் போது அவரை அறிந்து கொண்டான். எல்லாவற்றையும் பார்த்த அவர் இவர் மெய்யாகவே தேவ குமாரன் என்பதை அறிந்தான், இவர் தான் இரட்சகர் என்பதை அறிந்து சீஷர்கள் கூட அறிக்கையிட பயந்தார்கள் இவன் இயேசுவை ஆண்டவரே என்று அறிக்கையிடுகிறான்.
மற்ற கள்ளன் இவரை நிந்திக்கிறான். இவனே என்னை நிந்தித்தருளும் என்று கேட்கிறான். மற்ற கள்ளன் உயிருக்காக மன்றாடுகிற போது தன்னுடைய பாவ விடுதலைக்காக மன்றாடுகிறதை பார்க்க முடிகிறது.
அவனுடைய வாஞ்சை நித்திய வாழ்வில் இருந்து தன்னுடைய தவறை உணர்ந்தவனாக காணப்படுகிறான். விசுவாசத்தோடு இயேசுவிடம் திரும்பி உம்முடைய இராஜ்ஜியத்தில் என்னை நினைத்தருளும் என்றான். அந்த கள்ளவனுடைய விண்ணப்பம் கிறிஸ்துவோடு அவனை இணைத்தது, கல்வாரி சிலுவையில் தங்களை இணைத்து கொள்ளுகிறவர்களை கர்த்தர் உண்ணதங்களிலே உயர்த்தி நித்திய மகிழ்ச்சியை தந்தருளுகிறார். இணைத்து கொள்ளவில்லை என்றால் பரிதாபம் தான். (1 கொரி 1 : 18) கல்வாரியில் இணைக்கப்பட்டால் உயரமாகிய பரதிசியில் கொண்டு சேர்ப்பார்.
Story:
நம் ஆண்டவரின் நிந்தை, அவமானங்கள் நம்மை உள்ளத்திற்கு உயர்த்திவிட்ட படியால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையை குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்ட மாட்டேன் லீலி புஷ்பத்தின் மேல முட்கள் குத்தினால் இன்றும் அதிகமான வாசைன வரும் அவரை பரியாசம், நிந்தை பண்ணின போதும் பிதாவே இவர்களை மன்னியும் என்று மன்றாடியதை கள்ளனின் உள்ளத்தை உடைத்தது. அவரே மேசியா என்றும் அவருடைய ராஜ்ஜியம் நித்தியமானது என்று விசுவாசத்தை பெற்று கொண்டான்.
கள்ளனுக்கு கிடைத்த பாக்கியம் இயேசுவோடு கூட இருக்கிற பாக்கியம் கிறிஸ்துவின் அன்பு உண்ணதங்களில் அவரோடு உலாவுவது. பரதிசியின் பாக்கியங்களை ருசிக்க அவரோடு கூட நித்திய மகிழ்ச்சியை பெற்று கொள்ள எத்தனை அருமையான அனுபவம் இன்று நாம் கிறிஸ்துவோடு இருக்கிறோமா இருந்தால் நாமும் இதை பெற்று கொள்வோம்.
இரட்சிக்கபட்டவனின் ஜீவியம் நதிகளை போல அனேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கிறது. அவன் தனக்கு குடும்பம், சபை, பிறருக்கு ஆசீர்வாதமாய் இருப்பான். தேவ ராஜ்ஜியத்திற்கு அனுகூலமாய் இருக்கிறான். அவன் சமாதானத்தோடு தேசத்தை விட்டு பிரிந்து ஆண்டவரோடு இருப்பான். அவன் அனுபவிக்கும் சந்தோஷத்திற்கு அளவில்லை.