Sermons

கர்த்தரை அறிகிற அறிவு

தேவ பிள்ளைகளாகிய நமக்கு இது ஒரு தவக் காலமாகவும், மனம் திரும்புதலுக்கான காலமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

நம்முடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி ஜீவனை விட்ட அந் காட்சியை நாம் மனதில் நிறுத்தி பாவ வாழ்க்கையை விட்டு மனம் திரும்பும் காலமாக இந்த சிந்தனையை தியானக்க வேண்டும்.

தியானம்: கர்த்தரை அறிகிற அறிவு

"அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்" (ஓசியா 5:4).

கர்த்தரை அறிகிற அறிவு என்றால் என்ன?

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவான் 17:3).

பொய் தெய்வங்களை விட்டு உண்மையான தெய்வமாகிய நமது தேவனையும் அவருடைய குமாரனுமாகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசித்து ஏற்று கொள்வதே கர்த்தரை அறிகிற அறிவு.

இதை நாம் மூன்று வகையாக தியானிக்கலாம், 

1.கர்த்தரை அறியாமலிருக்கிற காரணம் என்ன?

"அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணினார்கள்" (ஓசியா 6:7).

குறிப்பு: கர்த்தரை விட்டு தூரம் போவதற்கு முக்கியமான கரணம் ஆசை.

"அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்"(2கொரிந்தியர் 10:5).

குறிப்பு: கர்த்தரை விட்டு தூரம் போவதற்கு முக்கியமான காரணம் மேட்டிமை.

"அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே, ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது" (யாக்கோபு 4:6).

2.கர்த்தரை எப்படி அறிகிறது 

பாவத்தை உணர்ந்து அறிக்கை செய்து இரக்கம் பெற்று கர்த்தரை அறியலாம். "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (1யோவான் 1:7).

3.கர்த்தரை அறிவதினால் கிடைக்கும் நன்மைகள் 

இயேசு கிருஸ்துவாகிய சத்தியம், வேத வசனமாகிய சத்தியம், சத்திய ஆவியானவரை அறிகிற அறிவு நமக்கு தேவை.

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்" (யோவான் 8:32).  "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," (யோவான் 8:36).

இயேசுவினுடைய தாழ்மையை அறியும்போது நம்முடைய பெருமையிலிருந்து விடுதலை அடைகிறோம்.

இயேசுவினுடைய மன்னிப்பை அறியும்போது நம்முடைய கசப்பிலிருந்து விடுதலை அடைகிறோம்.

இயேசுவினுடைய பரிசுத்தத்தை அறியும்போது நம்முடைய பாவத்திலிருந்து விடுதலை அடைகிறோம். இரட்சகர் என்று அறியும்போது இரட்சிப்பு அடைகிறோம்.

 அவர் வைத்தியர் என்று அறியும்போது நாம் ஏழ்மையிலிருந்து விடுதலை அடைகிறோம். அவர் உயர்த்துகிறவர் என்று அறியும்போது நாம் தாழ்மையிலிருந்து விடுதலை அடைகிறோம் .

சத்திய வேதத்தை அறிவதினால் நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோம்.

"உம்முடைய சாத்தியத்தினாலே அவர்களை பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்" (யோவான் 17:17). "அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தத்தினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும்  நற்குணசாலிகளாயிருந்தார்கள்" (அப்போஸ்தலர் 17:11).

"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" (யோவான் 16:13).

"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச்  சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்" (அப்போஸ்தலர் 1:8).

கர்த்தரை அறிந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் 

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (2 கொரிந்தியர் 2:14 ).

"அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்" (பிலிப்பியர் 3:8).

Loading...