நாம் செய்ய நினைக்கும் செயல்கள் செயல்படாத நேரங்கள் அனைவருக்கும் உள்ளன. அதனால் சிரமத்திற்கு ஆளாகிறோம், விரக்தி அடைகிறோம். மூடிய ஒவ்வொரு கதவும் நாம் ஏதாவது தவறு செய்கிறோம் என்று அர்த்தமல்ல. நம் வாழ்வில் ஏற்படுகிற தாமதம் சில நேரம் தேவன் நம்மை ஒரு பொல்லாப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன், நம்மை தாமதப்படுத்தும் ஒரு விஷயம் இருக்கிறது. அவர் கதவை மூடினால் அவர் பார்வையில் அது சிறந்ததல்ல என்று அர்த்தம்.
அவரது வழிகளைக் கண்டறியுங்கள் நீதிமொழிகள் 3: 5-6 "உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்."
நாம் செய்ய நினைக்கும் செயல்கள் செயல்படாத நேரங்கள் அனைவருக்கும் உள்ளன. அதனால் சிரமத்திற்கு ஆளாகிறோம், விரக்தி அடைகிறோம். மூடிய ஒவ்வொரு கதவும் நாம் ஏதாவது தவறு செய்கிறோம் என்று அர்த்தமல்ல. நம் வாழ்வில் ஏற்படுகிற தாமதம் சில நேரம் தேவன் நம்மை ஒரு பொல்லாப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன், நம்மை தாமதப்படுத்தும் ஒரு விஷயம் இருக்கிறது. அவர் கதவை மூடினால் அவர் பார்வையில் அது சிறந்ததல்ல என்று அர்த்தம்.
சில நேரங்களில், கர்த்தர் நம்மை வித்தியாசமான சூழ்நிலைகளில் நடத்தி சில காரியங்களை நமக்கு கற்றுக் கொடுத்து சில காரியங்களை நம்மைக் கொண்டு செய்து முடிப்பார். நான் தாமதமாக அல்லது சிரமத்திற்கு ஆளாகும்போது, புதிய கண்ணோட்டத்தைப் பெறுங்கள். தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்று பாருங்கள், ஏனெனில் அது தெய்வீக குறுக்கீடு அல்லது தெய்வீக பாதுகாப்பு. நாம் அவரை நினைக்கும் போது அவர் நமது பாதைகளை செவ்வை பண்ணுகிறார்.
நமது மனதின் ஒவ்வொரு பகுதியையும், விருப்பத்தையும், உணர்ச்சிகளையும் கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து, தேவ மகிமைக்காக பயன் படுவோம். ஆமென்.