கிறிஸ்துவை உடையவன். கிறிஸ்துவின் வழிகளில் நடக்கிறவன்.தேவன் நமக்கென்று திட்டமிட்டு காரியங்களை நடப்பிக்கிறவராக இருக்கிறார். அதில் அநேக பாடுகள், உபத்திரவங்கள் நிறைந்து காணப்படலாம். அதன் மத்தியில் நாம் எவ்விதம் ஓடிக் கொண்டிருக்கிறோம்? கிறிஸ்துவின் பெலத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறோமா?
நமது ஓட்டம்
விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிற வருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம (எபிரெயர் 12:1).
கிறிஸ்துவை உடையவன். கிறிஸ்துவின் வழிகளில் நடக்கிறவன்.தேவன் நமக்கென்று திட்டமிட்டு காரியங்களை நடப்பிக்கிறவராக இருக்கிறார். அதில் அநேக பாடுகள், உபத்திரவங்கள் நிறைந்து காணப்படலாம். அதன் மத்தியில் நாம் எவ்விதம் ஓடிக் கொண்டிருக்கிறோம்? கிறிஸ்துவின் பெலத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறோமா?
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபிரெயர் 10:36) என்று வேதம் சொல்லுகிறது. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளுகிறோம்? தேவன் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திற்கு வெற்றி நிச்சயம், ஆனால் அந்த வெற்றியை அடைய நாம் பொறுமையோடே தேவனை சார்ந்து ஓடவேண்டும். ஏனெனில் தேவன் அதை நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். அதை நிறைவேற்றக் கூடிய வழியை அவரே அறிந்தவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொறுமையில்லாமல் நாம் ஜீவக் கீரிடத்தைப் பெற முடியாது. பொறுமையில்லாமல் நாம் தேவனுடைய மகத்துவமான காரியத்தைக் காண முடியாது. ஒரு கிரிஸ்தவனில் காணப்படுகின்ற அடிப்படை குணாதிசயம் பொறுமை. பொறுமையோடு இயேசுவை நோக்கி நாம் ஓடுவோம். ஆமென்.