Sermons

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம்

"ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கை என்பதுண்டு. அந்த நம்பிக்கை என்னவெனில் நித்தியத்தைக் குறித்த ஆழமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் சாராம்சம் என்னவெனில் அது ஆனந்த பாக்கியமுடையது. ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இந்த நம்பிக்கை என்பது ஆழமாக பதிந்திருக்கவில்லை என்றால், அவனுடைய நித்தியம் கேள்விக் குறியே". 

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம்  தீத்து 2:13   "நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது." 

ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கை என்பதுண்டு. அந்த நம்பிக்கை என்னவெனில் நித்தியத்தைக் குறித்த ஆழமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் சாராம்சம் என்னவெனில் அது ஆனந்த பாக்கியமுடையது. ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இந்த நம்பிக்கை என்பது ஆழமாக பதிந்திருக்கவில்லை என்றால், அவனுடைய நித்தியம் கேள்விக் குறியே.     ஏனென்று கேட்டால் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் நித்தியத்தை குறித்து ஆழமான உறுதியான நம்பிக்கையைக் கொடுக்கிறார். நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  

ஒரு கிறிஸ்தவனுக்கு அவனுடைய நம்பிக்கை முழுவதும் நித்தியத்தைக் குறித்தே  காணப்படும். ஒரு மெயக்கிறிஸ்தவன் பரலோகத்தைக் குறித்து ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருப்பான். மேலும் இந்த உலகம் ஒரு வாடகை வீடுதான் என்றும் நிச்சயத்திருப்பான். அவன் எந்தவொரு சூழ்நிலையிலும் (கஷ்டங்கள், பாடுகள், துக்கங்கள், சிலுவை உபத்திரவங்கள்) எதுவாயினும் அவன் கடந்து செல்ல கர்த்தரின் கிருபையை சார்ந்திருப்பான்.  இவ்விதமான நம்பிக்கை காணப்படுகின்றதா? ஆமென்.


Loading...