Sermons

உன்னதப்பாட்டு 2 : 6

"அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது”.

நாம் ஒரு குழந்தையை நம் கைகளில் வைத்திருக்கும் காட்சியை சிந்தித்துப்பாருங்கள், நமது இடதுகை குழந்தையின் தலையைத் தாங்கும், வலதுகை குழந்தையை அணைத்துக் கொள்ளும். அதேபோல் இயேசு கிறிஸ்து இன்று நம் ஒவ்வொருவரையும் அவருடைய கரத்தினால் அணைத்து தாங்கிக் கொள்கிறார்.

இயேசு கிறிஸ்து சபையை ஒருபோதும் கைவிடமாட்டார், எப்பொழுதும் தாங்குகிறார் என்று சபைக் கூறுவதாகும்  (சங்கீதம் 37:24).  வேதனையும், துன்பமும் நிறைந்த ஒரு உலகத்தை கடந்துச் செல்லும்போது சபைக்குத் தேவையான ஆறுதலையும், அரவணைப்பையும் பற்றிக் கூறுவதாகும். நேசரின் கரத்திலிருந்து சபையை யாராலும் பறிக்க  யலாது (யோவான் 10:27-29)  என்பதில் சபை உறுதியாக இருக்கிறது. தலையைத் தாங்கி கழுத்தை பெலப்படுத்த உதவும் இடதுகை, அன்பும் மற்றும் கிருபையுமுள்ள வலது கை, சபையை மென்மையாக அரவணைக்கிறது. இயேசு கிறிஸ்து யாரையெல்லாம் அணைத்துக் கொள்கிறார்? எல்லோரையுமேவா? இல்லை. யார் ஒருவர்  சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்களோ அவர்களைத்தான் அவர் அணைத்துக்கொள்கிறார் (மாற்கு 10 : 15, 16). அவர் அன்று சிறு பிள்ளைகளை அணைத்து ஆசீர்வதித்ததுப் போல இன்று சபையை ஆசீர்வதிக்கிறார்.

நீதிமொழிகள் 3 : 16-ல் அதன் வலது கையில் தீர்க்காயுசும், அதன் இடது கையில் செல்வமும், கனமும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் கொலோசெயர் 3 : 1 -ல் தேவனுடைய வலது பாரிசத்தில் உள்ள மேலானதைத் தேட வேண்டும் என்றும், பிரசங்கி 10 : 2 -ல் ஞானியின் ருதயம் வலதுகையில் உள்ளதைத் தேடும் என்றும் அதாவது தேவனுடைய வலது பாரிசத்திலுள்ள மேலான நித்திய ஜீவனைத் தேடும் என்றும் கிறிஸ்துவினுடைய வலது கரத்தினால் கிடைக்கிற நித்திய ஜீவனைப் பெற்று அவரால் அணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இவ்வசனத்தில் மட்டுமன்றி உன்னதப்பாட்டு 8 : 3 -லும் சொல்லப்பட்டிருக்கிறது. .

நீங்கள் கிறிஸ்துவால் அணைத்துக்கொள்ளப்படுகிறீர்களா?

குறிப்பு வசனம் :  வெளி 1: 17


Loading...