Sermons

ஜெபத்தோடு தேவ செய்திகளை கேட்போம்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:14.  " பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்." 

போதகர்கள் கர்த்தருடைய வார்த்தைகளை பிரசங்கம் செய்கிறபோது, அதை எல்லோரும் கவனிக்கிறது இல்லை.  ஒரு சிலர் மட்டுமே அதை கவனிக்கிறார்கள். அந்த வார்த்தை அவர்களுக்குள் சென்று ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. உண்மையான ஞானத்தை அவர்கள் அதன் மூலம் பெற்றுக் கொள்கிறார்கள். 

கர்த்தருடைய கிருபையினால் தேவ செய்தியை கேட்பதற்கு ஒரு மனிதனின் இதயம் திறக்கப்படுகிறது.கர்த்தருடைய வார்த்தையை இருதயத்தில் நம்புகிற பொழுது மனிதன் நீதியை பெறுகிறான். வாயினால் அறிக்கை   செய்யும்பொழுது இரட்சிப்பை பெறுகிறான். (ரோமர் 10:10).   

கர்த்தர் திறந்தார்;  இது கர்த்தருடையவேலை;  நம்முடைய இரட்சகரே சொன்னபடி,  யோவான் 6:44 , என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; ஆகையால் தேவ கிருபையை நான் பெற்றுக்கொண்டால் நம் இதயங்களைத் திறக்கலாம்.  நாம் கர்த்தரிடத்தில் ஜெபம் செய்து, அவருடைய கிருபையோடு நாம் செல்லும் பொழுது , தேவ செய்திகளை நாம் கேட்க கர்த்தர் நமது இருதயத்தை திறந்தருவார். அப்பொழுது உண்மையான ஞானத்தை பெற்று நம் வாழ்க்கையில் நாம் விடுதலையை பெற்றுக் கொள்கிறோம். ஜெபத்தோடு தேவ செய்திகளை கேட்போம். ஆமென். 


Loading...