"எனக்கு ஓத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங். 121:1).
உறுதியான, வலிமையான வழியை தாவீது ராஜா அறிந்திருந்தார். அது கர்த்தருக்கு நேராய் எப்பொழுதும் கண்களை ஏறெடுக்கும் வழிதான். ஆம், தேவ ஒத்தாசையால் மட்டும் ஜெயங்கொண்டவர்களாய் விளங்க முடியும்.
ஒரு நாள் பேதுருவின் கால்கள் வழுவினது. தண்ணீருக்குள் செல்ல ஆரம்பித்தார். கர்த்தரை அவருடைய கண்கள் காணாமல் கடல் அலையை நோக்கினதினாலே அவர் வழுவ வேண்டியதாயிற்று. வழுவினது மாத்திரமல்லாமல் தண்ணீருக்குள் அமிழ்ந்துபோக வேண்டியதுமானது. அந்த சூழ்நிலையில் வழுவாதபடி காக்கிறவரை நோக்கி, "ஆண்டவரே, என்னை இரட்சியும்" என்று கூப்பிட்டார் (மத். 14:30) . உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து தூக்கி நிறுத்தினார்.
ஜீவிய காலமெல்லாம் வழுவாதபடி உங்களை நிலைநிறுத்த கர்த்தர் ஜீவனுள்ளவராயிருக்கிறார்; வேதம் சொல்லுகிறது, "அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்" (எபி. 7:25). நம்முடைய கண்கள் எப்பொழுதும் கர்த்தரையே நோக்கி இருக்கட்டும். ஆமென்.