"கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்." சங்கீதம் 126: 3 .
இந்த உலகத்திலே அநேக ஜனங்கள் இருக்கிறார்கள். சிலர் கிறிஸ்துவை அறிந்தவர்கள் , சிலர் கிறிஸ்துவுக்கு விரோதமாக இருக்கிறார்கள். நான் என் உள்ளத்திலே , சில நேரங்களில் இதை நினைத்ததுண்டு. அது என்னவென்றால் ஒரு வேளை நான் ஆண்டவரை அறியாத ஒருவனாக, வேறு மார்க்கத்தில் பிறந்தவனாக இருந்திருப்பேனானால் இன்று என் நிலைமை ஒரு கேள்விக்குறியாய் இருக்குமே!
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அவருடைய பிள்ளைகளே நாம் மகிழ்ந்து களிகூறுவோம். இதை நம்முடைய கிரியையால் நாம் பெற்றுக் கொள்ளவில்லை. தேவனுடைய கிருபையினால் இன்று நாம் கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கிறோம். தேவ அன்பை உணர்ந்தவர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு பொக்கிஷம்.
கர்த்தர் என் வாழ்வில் என்ன செய்துவிட்டார் என்று கேட்கிறவர்கள் அநேகர் உண்டு. அவருடைய ஜனமாக நம்மை முன் குறித்து இருக்கிறாரே இதை விட பெரிய காரியம் எதுவும் இல்லை. இதை நினைத்து நினைத்து நாம் ஒவ்வொரு நாளும் ஸ்தோதரித்து, மகிழ்ச்சியோடு அவரை துதிப்போம். ஆமென்.