ஏசாயா 58:7. "பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும் துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால், அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும் உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்."
ஊக்கமாக ஜெபிப்பதற்கு உபவாசம் இருப்பது நல்லது தான். ஆனால் அது ஒரு சடங்காச்சாரமாக இருக்கக் கூடாது. சிலர் ஊழியக்காரர்கள் உபவாசம் இருங்கள் என்று சொன்னவுடன் இருப்பார்கள் அவர்களுக்குள் ஒரு நோக்கமே இருக்காது.
ஒரு சிறுவனை தங்களால் குணமாக்க முடிய வில்லை: ஏன் என்று இயேசுவிடன் கேட்ட பொழுது உங்கள் அவிசுவாசத்தினால் தான் என்று இயேசு கூறினார். இந்த ஜாதி பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினால் அன்றி மற்ற எந்த விதத்திலும் புறப்பட்டு போகாதே என்று கர்த்தர் சொன்னார். இதில் உபவாசத்திர்க்கு என்று ஒரு நோக்கம் இருக்கிறது.
கர்த்தர் விரும்புகிற உபவாசம் இந்த வசனத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. பசித்தவனுக்கு ஆகாரமும், சிறுமையானவனை சேர்த்துக் கொள்ளுதலும், வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும் கர்த்தருக்கு உகந்த உபவாசம். இதை கடைப்பிடிக்கிறவர் வாழ்வில் தான் அவருடைய வெளிச்சம் எழும்பி, சுக வாழ்வு துளிர்த்து, நீதி நமக்கு முன்பாக சென்று, அவருடைய மகிமை பின்னாலே நம்மை காக்கும். உபவாசம் இருக்கும் நாம் முதலாவது கர்த்தர் விரும்புகிற உபவாசத்தை கடைபிடிப்போம். ஆமென்.