Sermons

தவறை ஒத்துக் கொள்வது

2 சாமுவேல் 12:13.  "அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான்." 

ஒருவர் நமது தவறை சுட்டிக் காட்டும் பொழுது அந்தத் தவறை சுட்டிக் காட்டின அவரை விரோதியாக பார்க்கிறோமா ? அல்லது அவர் சொன்ன தவறு என்னில் இருக்கிறதா? அல்லது அந்தத் தவறை மறைப்பதற்கு வேறு ஏதாவது காரணங்கள் சொல்கிறோமா?  என்று ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது. 

விலக்கப்பட்ட கனியை புசித்த ஏவாள் சாத்தானை காரணம் காட்டினாள்.  நீ ஏன் சாப்பிட்டாய்? என்று ஆதாமிடம் கேட்ட பொழுது அவன் ஏவாளை காரணம் காட்டினான். யாரும்  தாங்கள் தவறு செய்ததை நேரடியாக ஒத்துக் கொள்ளவில்லை. கர்த்தர் நாம்  செய்த தவறை உணராமலும் , ஒத்துக்கொள்ளாமல் போவதையே கடுமையான தவறாக பார்க்கிறார். 

தாவீதின் தவறு நாத்தான் தீர்க்கதரிசியால் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு அவன் வேறு காரணங்களைக் கூற முற்படாமல். நான் பாவம் செய்தேன் என்று ஒத்துக் கொண்டு மனம் வருந்தினான். எனவே அவன் மீண்டும் தேவ கிருபையை பெற்றான். குறைவுகளை தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்வோம், தேவ கிருபையை பெறுவோம் .ஆமென்.


Loading...