எபிரெயர்2:4. தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
ஒரு மனிதனுடைய வாழ்வில் இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதம் போதுமானதாகும். எனவேதான் வேதாகமம் இரட்சிப்பைக் குறித்து இவ்வளவு பெரிதானது என்று கூறுகிறது.பாவத்திலிருந்து இரட்சிப்பின் அனுபவம் பெற்று விட்டால் ,தேவ நன்மைகள் யாவும் கிடைத்துவிட்டது என்று சொல்லலாம்.
தேவன் நமக்கு கொடுத்த இரட்சிப்பினால் விசுவாசம் என்னும் தெய்வ அருளைப் பெறுகின்றோம். விசுவாசத்தினால் எல்லா சூழலிலும் வாழ முடியும். இரட்சிப்பினால் நாம் தேவ உறவை பெற்று எல்லா விதத்திலும் வழிநடத்த படுகிறோம். இரட்சிப்பினால் தேவ வல்லமை பெற்று எல்லாவற்றிலும் தைரியமாக சந்திக்கிறோம். இரட்சிப்பினால் நாம் தேவ வார்த்தைகளை பெற்று நாம் வாழும் வழிகளை அறிகின்றோம்.
இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை நாம் இரட்சிப்பினால் பெறுவதால் , வேதம் இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நமக்கு சொல்கிறது இதை நாம் பெற்று தேவ ஆசீர்வாதத்தை பெறுவோம் . ஆமென்.