Sermons

பொறாமை

பொறாமை உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம்.  (ரோமர் 13:13). 

பொறாமை எவ்வளவாய் மனிதனை பல பிரச்சனைகளுக்குள் நடத்துகிறது. நாம் கண்கூடாக பார்க்கிறோம். பொறாமையால் மனிதர்களுக்கு விரோதமாக மனிதர்கள் செயல்படுகிறார்கள், அதினால் அநேக பயங்கரங்களும் நடக்கிறதைப் பார்க்கமுடியும். ஆனால் ஒரு கிறிஸ்தவன் பொறாமை உள்ளவனாக இருக்கமுடியுமா? இல்லை. அவன் அவ்விதமாக இருக்கக்கூடாது. 

 பொறாமைப்படுகிகிறவர்கள் தனக்குத்தானே தீமையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்,  ஒருவருடைய இருதயம் அதனால் பாதிக்கப்படுகிறது, கடினப்படுகிறது. அவர் தேவனை  துக்கப்படுத்துகிறார். அது மாத்திரமல்ல தொடர்ந்து பொறாமையானது இன்னும் அதிகமான பாவத்திற்கு  வழிநடத்திச் செல்லும். காயீன் ஆபேலின் மேல் பொறாமை கொண்டான். காயீன் அதோடு நின்றுவிடவில்லை, அவன் ஒரு கொலைகாரனாக மாறும் அளவுக்கு அவனை அது கொண்டு சென்றது. 

பொறாமையோ எலும்புருக்கி (நீதி 14:30) பொறாமை உள்ள மனிதனின் மனதிலும் ஆரோக்கியமிருக்காது, தேவன் நமக்கு கொடுத்ததில் சந்தோஷமுள்ளவர்களாய், தேவனையே நோக்கிப்பார்த்து சீராய் நடக்கக்கடவோம். உள்ளத்தில்  திருப்தியாய் இருப்போம். அது நமக்கு ஆசீர்வாதமாய் இருக்கும். ஆமென். 


Loading...