"நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்”.
இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து, நானே உங்களுக்கு நல்ல மேய்ப்பனாகவும், அடைக்கலமாகவும், ஒவ்வொரு நாளும் போஷிக்கிறவராகவும் இருந்து, என் மகிமையையும், மகத்துவத்தையும் உங்களுக்கு வெளிப்படுத்தி, சாந்தமும், மனத்தாழ்மையுமாக இருக்கிறேன் என்று கூறுகிறார்.
சாரோனின் ரோஜா: சாரோன் மிகவும் முக்கியமான இடமாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவைகள்
1) மந்தைகளின் ஆட்டுத்தொழுவமாக குறிப்பிடப்பட்டுள்ளது. (ஏசாயா 65 : 10).
2) இது கர்த்தருடைய போஷிப்பை வெளிப்படுத்துகிறது. அங்கு தாவீதின் கால்நடைகளுக்கு உணவளிக்கப்பட்டது. (1 நாளா 27 : 29)
3) கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் குறிக்கிறது. (ஏசாயா 35 : 2)
பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பம் : கிறிஸ்து தன்னைப் பள்ளத்தாக்குகளின் லீலி புஷ்பம் என்று கூறுகிறார். பள்ளத்தாக்குகளில் லீலி புஷ்பத்தைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், பார்வைக்கு இனிமையும், குளிர்ச்சியும் கொடுக்கும். மேலும் மறுபிறப்பிற்கும், தாய்மைக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அவை மகிழ்ச்சி கொடுப்பதாகவும், பரிசுத்தத்தை குறிக்கிறதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியானால் நான் சாந்தகுணமுள்ளவனாகவும், மனத்தாழ்மையுள்ளவனாகவும் இருக்கிறேன் என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு ஒப்பிடலாம். மத் 11 : 29 -ல் அதேபோல் அவர் சபையையும் எதிர்பார்க்கிறார். மத் 5 : 5 -இல் இயேசு கிறிஸ்து கூறுகிறார், சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். லீலி புஷ்பம் பள்ளத்தாக்குகள் எங்கும் பரவியும், நன்றாக மலர்ந்தும் காணப்படுகின்ற ஒரு சிறிய பூ. இது பூமியில் சபையானது பலுகிப் பெருகி ஆசீர்வாதமாக இருப்பதைக் குறிப்பிடுகிறது.
இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்தை உணர்ந்திருக்கிறீர்களா?
குறிப்பு வசனம்: சங் 85: 11, ஏசா 35: 1,2, ஏசா 57: 2 : 1