Sermons

ஏன் ஜெபம் கேட்கப்படவில்லை?

 யாக்கோபு 4:3   "நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்." 

சில நேரங்களில் நாம் ஜெபித்தாலும், அதற்கு பதில் வராமல் இருக்கலாம். இது எல்லோருடைய வாழ்விலும் இருக்கும் ஒன்றுதான். ஏன்?  

அவர்கள் ஜெபம் கேட்கப்படாதது ஏனென்றால்,

1) கேட்கிறவர்கள் பாவத்தில் இருப்பதினால்.

2) சரியான நோக்கத்துடன் ஜெபிக்காமல், தங்கள் சுய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஜெபிப்பதினால்.

3) நன்மை என்று எண்ணி, நாம் கேட்கிற விஷயம் தேவனுடைய பார்வையில் தீமையாக தெரியலாம்.

4) நாம் பெற்றுக் கொண்டால், நாம் பெருமை  என்ற பாவத்தில் விழ நேரிடும் என்பதால் கொடுக்கப்படாமல் இருக்கலாம்.

5) நாம் கேட்கிற காரியம் தேவ சித்தத்திற்கு விரோதமானதாக இருக்கலாம்.

6) நாம் கேட்கிற காரியம் தேவ நீதிக்குப் புறம்பான காரியங்களாக இருக்கலாம். 

  தேவ சித்தத்தை அறிந்து உறுதியுடனும், விசுவாசத்துடனும் ஜெபிப்போம். அப்பொழுது அவருடைய வாக்குறுதிகளை நம் வாழ்வில் நிறைவேற்றுவார்.  ஆமென். 




Loading...