Sermons

உன்னதப்பாட்டு 1 : 17

"நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.”

கிறிஸ்து நமக்குள் வாசம் செய்வதால், தேவனுடைய வீடாகிய  மனவாட்டியாகிய நாம்,  அவர் ராஜரீகம் பண்ணுகிற ராஜ கம்பீரமும், ராஜ வலிமையுடைய  மணவாட்டி என்பதை குறிக்கிறது.

இந்த வசனம் சபையும், கிறிஸ்துவும் சேர்ந்து பாடுகிறதாக இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய வீட்டின் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய ஆலயத்தை வீடு என்று தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டிருக்கிறது (ஆகாய் 1 : 2-5). இன்று புதிய ஏற்பாட்டில் நம் சரீரமே தேவன் தங்கும் ஆலயம் என்று வேதம் நமக்கு கூறுகிறது. 1 கொரிந்தியர்  3:17 "நீங்களே அந்த ஆலயம்". நம்முடைய வீடு என்பது நம்முடைய சரீரத்தையும் குறிக்கும்.  இப்படியாக கிறிஸ்து நமக்குள் வாசம் செய்வதினால், மனவாட்டியாக சபை ராஜரிகமுள்ளவளாகவும், வலிமையுள்ளவளாகவும் காணப்படுகிறார்.

தேவனுடைய ஆலயத்தின் சிறப்பை வெளிப்படுத்துவதற்கும், அதன் உறுதியை உணர்ந்து கொள்வதற்கும் இங்கே இரண்டு மரங்கள் நமக்கு கூறப்பட்டிருக்கிறது. சாலொமோன் தேவாலயம் கட்டுவதற்கு குறிப்பாக கேதுரு மரத்தையும் தேவதாரு மரத்தையும் பயன்படுத்தி இருக்கிறான் (1இராஜா 5 : 10) . தேவாலயத்தின் உத்திரங்கள் கேதுரு மரத்தினால் செய்யப்பட்டது. (1 இராஜா 6 : 9, 15) கேதுரு மரம் மற்றும் தேவதாரு மரங்கள் வலிமையையும், இராஜரீகத்தையும் குறிக்கிறது. விலை உயர்ந்த ஆவிக்குரிய முத்துக்கள், நவரத்தினங்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியின் சரீரமாகிய வீட்டின் ராஜரீகத்தை தேவதாரு மரமும், ராஜரீக வலிமையை கேதுரு மரமும் வெளிப்படுத்துகிறது. 

இயேசு கிறிஸ்துவின் ராஜரீகத்தையும், ராஜரீக வலிமையும் நீங்கள் உங்களுக்குள் உணர்ந்திருக்கிறீர்களா?


குறிப்பு வசனம் : 2நாளா 2: 8,9, சங் 92: 12, 13,  1தீமோ 3: 15, எபி 1: 10, சங் 23: 6,     எபேசியர் 2: 19-22

Loading...