Sermons

எச்சரிக்கை

 "லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். (லூக்கா 17:32).  

வேதத்தில் நாம் திருஷ்டாந்தமாக வைக்கப்பட்ட மனிதர்களைக் குறித்து வாசிக்கிறோம். நல்ல முன்மாதிரியாக, அவர்களைப்  பின்பற்றக் கூடிய அருமையான சாட்சிகளை  வைத்துப்போனவர்கள் உண்டு. அதே விதமாக நம்மை எச்சரிப்பதாகவும், நாம் பின்பற்றக்கூடாத கெட்ட முன்மாதிரியையும் வைத்துப்போனவர்களும் உண்டு. இந்த இடத்தில் ஆண்டவர் ஏன் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்?  

ஆண்டவர் அவர்களைத்  தப்புவிக்கும்படியாக முயற்சித்த வேளையில் அவள் இருதயம் சோதோமில் நிலைத்திருந்தது. தேவதூதர்கள் எச்சரித்ததை, சிறிது தூரம் கடைப்பிடித்தாள். முழுமையாக கீழ்படியாததால், எச்சரிப்பை மீறி, அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூணானாள்;  (ஆதி 19:26)  என்று சொல்லப்படுகிறது. 

கர்த்தரோடு செல்ல வேண்டும் என்று நினைக்கும்போது, உலகத்தையும் அதன் இச்சையையும் உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தால், பின்னிட்டுப்போவது நிச்சயம் என்று எச்சரிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  

மத்தேயு 24:13 "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்."  

வேதத்தில், இதைப்போன்ற செயல்களை நாம் பார்க்கும் பொழுது, தேவன் எச்சரிக்கிறார் என்று நாம் உணர வேண்டும். அவளுடைய முடிவை ஒருவரும் சந்திக்கக்கூடாதபடிக்கு கர்த்தர் நம்மைக்காப்பாராக. ஆமென். 


Loading...