2 கொரிந்தியர் 3:17. "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு."
கர்த்தருடைய ஆவி இருக்கும் இடம் எப்படி இருக்கும்?
மனிதர்களின் மனதை அறிவூட்டி ,புதுப்பித்து, சுதந்திரமாக இருக்க உதவுகிறது . மேலும் அடிமைத்தன பயத்திலிருந்து விடுதலையும், குற்ற உணர்ச்சியிலிருந்தும், பாவத்தின் வல்லமையில் இருந்தும் சுதந்திரம் கிடைக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்யும் பொழுது, அவருடைய ஞானத்தையும், வல்லமையையும், நன்மையையும், உண்மையையும், நீதியையும், பரிசுத்தத்தையும், கருணையையும், குறிப்பாக அவருடைய அன்பையும், அவரது பிற தார்மீக பரிபூரணங்களையும், மகிமையையும், கண்ணாடியில் பார்ப்பது போல நாம் உணர்ந்து, அறிந்து கொள்ள முடியும்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அனுபவித்து நம்புகிறவர்களின் நிலை மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் செயல்படுவதால், தேவனுடைய வார்த்தை இயங்குவதற்கு இதயம் சுதந்திரமாக இருப்பது அவசியமான ஒன்று. அவர்களுக்குள் மெய்யான ஒளி பிரகாசிக்கிறது. திறந்த முகத்துடன் அவர்கள் கர்த்தருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
பரிசுத்த ஆவியானவரால் கிடைக்கின்ற விடுதலை பெற்ற வாழ்வை கவனத்துடன் வாழ்வோம். ஆமென்.