உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ;.உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா - நியா.6:14
நமக்கு என்ன தெரியுமோ, நம்மால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதை ஆண்டவருக்கென்று செய்ய வேண்டும். ஆண்டவர் நமக்கு எதை கொடுத்திருக்கிறாரோ, அதை மட்டுமே அவர் கையில் கொடுக்கும்படி அழைக்கிறாரே ஒழிய, அவர் கொடுக்காதவற்றை நம்மிடம் கேட்பதில்லை. நமக்கிருக்கிற தாலந்துகளைக் கொண்டு அவரை சேவிக்க வேண்டும். ஆண்டவர் கிதியோனைப் பார்த்து சொன்னதுபோல, உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறார். நாம் இன்று சொல்ல வேண்டியது: ஆண்டவரே என்னுடைய பயிற்சி எல்லாம் ஒன்றுக்குமே உதவாது. உம்முடைய கிருபையினாலும், பலத்தினாலும் என்னை நடத்தும் என்று அர்ப்பணிக்க வேண்டும்.
பிரியமானவர்களே! ஆண்டவருக்காக வாழவிரும்பும் நாம் ஒவ்வொருவரும் கூறவேண்டியது, ஆண்டவரே நீர் எதைச் செய்யச் சொல்கிறீரோ, அதை நான் செய்கிறேன். என் திட்டங்கள், திறமைகள், சாமர்த்தியங்கள் அல்ல. என்னை முழுவதும் வெறுமையாக்கி நீர் செய்ய சொல்வதை நான் செய்கிறேன் என்போம். நம் வாழ்க்கையை வெறும் தாளாக்கி, அவர் கையில் அதை கொடுக்கும்போது அவர் அதில் எழுதுகிறார். இறுதியில் நம்முடைய கையெழுத்தை மட்டும் அதிலே போட்டுவிட வேண்டும். இதுவே அவர் நம்மை பயன்படுத்த நாம் செய்ய வேண்டிய உகந்த காரியமாகும். ஆமென்.