சங்கீதம் 139:17. "தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்."
நாம் நம்முடைய வாழ்வில் ஏதோ ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்றால், நாம் அநேகரிடம் ஆலோசனை கேட்பது வழக்கம். சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பது; வேலைகளிலேயே அனுபவம் இல்லாதவர்கள் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. இது ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிப்பதற்கு மட்டும் தான் மனிதர்களுடைய ஆலோசனைகள் நமக்கு உதவும்.
ஆனால் நம் வாழ்க்கைப் பாதையில் முழுமையான ஒரு வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கும், தேவ சித்தத்தை அறிந்து சரியானபடி செயல்படுவதற்கும் கர்த்தருடைய ஆலோசனை மிக அவசியம்.
நோவா, தாவீது, ஆபிரகாம் இன்னும் பலர் கர்த்தருடைய ஆலோசனையின்படி நடந்து இறுதியில் வெற்றி பெற்ற மனிதர்களாய் திகழ்ந்தார்கள்.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே, கர்த்தருடைய ஆலோசனை நம்முடைய வாழ்விலே முக்கியத்துவமாக இருந்து, நாம் அதற்குக் கீழ்ப்படிந்து வாழும்போது ,தோல்வி என்பது நமது வாழ்வில் கிடையாது. ஆமென்