Sermons

முன்மாதிரி

தீத்து, 2:7" நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, நாம் நல்லவர்களாகவும், தேவனுக்கு பிரியமானவர்களாகவும், மற்றவர்களுக்கு மாதிரியாக வாழும்போது, நம்மைப்போல எல்லோரும் அப்படி மாறிவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் நாம் எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். 

சிலர் மற்றவருடைய நல்ல வாழ்க்கையும், முன்மாதிரியான வாழ்க்கையைப் பார்த்து அந்த வேறுபாட்டை அறிகிறார்கள். ஆனாலும் அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. 

  ஒருவன் தன்னைக் கர்த்தருக்கு அர்ப்பணித்தால் மட்டுமே அவருடைய பாவ இயல்பு நீங்கி பரிசுத்தமாக வாழ வாய்ப்பு ஏற்படும். 

எல்லோரும் கர்த்தருக்கு தங்களை அர்ப்பணித்து, கர்த்தருக்குள் நிலைத்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும், அப்படி இல்லாமல் போனாலும் நாம் சோர்ந்து போகக்கூடாது. நாம் அவர்களுக்கு ஒரு நல்ல மாதிரியாக இருப்பது அவசியமானது. கர்த்தர் ஒரு நல்ல மாற்றத்தை அவர்களுக்கு கொடுப்பதற்கு நாம் அவர்களுக்காக ஜெபம் பண்ணுவது நமது கடமையாகும். ஆமென். 


Loading...