Sermons

கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு

ஏசாயா 3:3-4 - ல் நல்ல தொழில்களையும், சாமர்த்தியம் உள்ள தலைவர்களையும் நான் விலக்குவேன் என்று ஆண்டவர் சொல்கிறார்.

கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு ஒரு தேசத்துக்கு விரோதமாக வரும்போது அங்கே நல்ல தலைவர்களையும் , அந்த நாட்டிலே நல்ல ஒரு தொழில் வளர்ச்சியையும் ,மற்றும் நல்ல ஆலோசனைகள் கொடுக்கிற நபர்களையும் அந்த தேசம் இழந்துவிடுகிறது. அன்பானவர்களே இதை நாம் பார்க்கும் பொழுது நாம் வாழ்கிற தேசம் இன்று எப்படி இருக்கிறது இந்த வசனத்தின் அடிப்படையில் தேசம் இருக்கிறதா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏசாயா 3:4 கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு ஒரு தேசத்திற்கு எதிராக வரும்பொழுது அந்த தேசத்தில் வாலிபர்கள் அதிபதிகளாகவும் பிள்ளைகள் போன்றவர்கள் ஆளுகிறது பார்க்க முடியும். இன்று வட கொரிய நாட்டை நாம் பார்க்கும் பொழுது அங்கே ஒரு இளைஞன்.அதிபதியாக ,ஒரு சர்வாதிகாரியாக ஆளுகிறது நாம் பார்க்க முடிகிறது.

இன்று அநேக நாடுகளில் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பை இதுபோல் பார்க்க முடிகிறது(நல்ல தலைவர்கள் இல்லாமல் திறமையற்றவர்கள் ஆளுகிறதை) நாம் நம் தேசத்திற்காக கர்த்தருடைய இரக்கம் கிடைக்க ஜெபிப்போம் ஆமென்.


Loading...