Sermons

உன்னதப்பாட்டு 8 : 8

"நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும்நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?”

சபையில் உள்ள பொதுவான கிறிஸ்தவர்களை குறித்து மணவாட்டி பேசுவது இந்த வசனம்.

"நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு,“  என்பது, புதிய ஏற்பாட்டு மணவாட்டி தகுதிபெற்ற சபை , மணவாட்டி ஆயத்தம் இல்லாதவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லியும் விசுவாசம்,அன்பு,தெய்வ பக்தி இவைகளில் குறைவுள்ளவர்களைப் பற்றி கூறுகிறது. அவர்கள் தான் மணவாட்டியாகிய சபையின் பார்வையில் சிறிய சகோதரி.

"அவளுக்கு ஸ்தனங்களில்லை” அதாவது சபையில் மணவாட்டி ஆயத்தம் இல்லாத அல்லது தகுதி இல்லாத ஜனங்கள் தாய்மை உள்ளம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை மணவாட்டி சபை கூறுகிறார்கள்.

"நம்முடைய சகோதரியைக் கேட்கும்நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?” நம் சகோதரிக்கு என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்கு நமது கடமையை அறிந்து, கிறிஸ்துவையும், அவருடைய வருகையையும் குறித்து அறிவிக்க  வேண்டும். எசேக்கியேல் 38: 7 இல் "நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அவர்களை நேர்மையான மற்றும் தீவிரமான அன்புடன் அரவணைத்து, அவர்கள் கிறிஸ்துவுக்குள் வருவதை ஊக்குவிக்க வேண்டும். ரோமர் 14 : 1  ல் "விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்;. ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்." என்று சொல்லப் பட்டிருப்பது போல, இன்று சபையில் விசுவாசத்தில் பலவீனம் உள்ளவர்களை, நாம் அன்போடு சேர்த்து அவர்களையும் மணவாட்டி ஆயத்ததிற்கு ஊக்குவிக்க வேண்டும். 2 கொரிந்தியார் 11:28 ,ல் "எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.” என்று பவுல் குறிப்பிடுகிறார். இன்று மணவாட்டி ஆயத்தமுள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு ஏக்கம் சபையை குறித்து இருக்க வேண்டும்.

ஒரு நபர் தனது விசுவாச  பலவீனத்தின் காரணமாக நிராகரிக்கப்படக்கூடாது, கிருபையிலோ அல்லது விசுவாசக் கோட்பாட்டிலோ, அவருக்கு கிறிஸ்துவின் உண்மையான கிருபை இருக்கிறது.  ஏனெனில், "அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்." என்று ஏசாயா 42 : 3  ல் கூறப்பட்டிருக்கிறது. எனவே சபை  அவர்களுக்கு முறையான வழிமுறைகளை வழங்குதல்; அவர்களுடனும் அவர்களுக்காக ஜெபித்தல்; அவர்களுடைய பரிசுத்தமான விசுவாசத்தில் அவர்களைக் கட்டியெழுப்பவும், அவர்கள் பலவீனமான விஷயங்களைப் பற்றிய அறிவை அவர்களுக்குக் கொண்டுவரவும் முயற்சி செய்ய வேண்டும் . 

மணவாளனாகிய இயேசு கிறிஸ்து, விசுவாசத்தில் குறைவுள்ள மணவாட்டியின் சிறிய சகோதரிகளை பற்றி மணவாட்டி சபையிடம் கேட்பார் என்பதை இந்த வசனம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற விசுவாசம் இருக்கிறதா?

குறிப்பு வசனம்:  எசே 16 : 61, எசே 23 : 23, யோவான் 10 : 16, அப் 15 : 14-17

Loading...