Sermons

உன்னதப்பாட்டு 8 : 5

"தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.”

 "தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்?”   வனாந்திரத்தில் இருந்து ஏரி வருகிறவர் நேசராகிய இயேசு கிறிஸ்து (சங்கீதம் 68 : 4) . நேசர் மேல் சாய்ந்துகொண்டு மணவாட்டி சபை வருகிறார்கள்.

இவர்கள் ஏன் வனாந்திரத்தில் போனார்கள்?

ஒசியா 2 : 11- 15  ல் அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும் ஒழியப் பண்ணுவேன். தமது ஆசீர்வாதத்தில் மகிழும்படிக்கே தனது ஜனங்களுக்கு தேவன் பரிசுத்த நாட்களையும், பண்டிகைகளையும் கொடுத்தார். ஆனால் அவர்களோ கேளிக்கைகளுக்கும், நேரப்போக்குக்கென்றும் உபயோகிக்க ஆரம்பித்தனர். எனவே தேவன் கொடுத்த இப்பண்டிகைகள் அவருடையதாயிராமல் "அவளுடையதாயிற்று" (இஸ்ரவேலரின்) அவைகள் சடங்காச்சாரங்களாக, சமுதாயக் கூடுகைகளாக மாறிவிட்டதை சுட்டிக்காட்டுகிறார்.

கர்த்தருடைய ஜனங்கள் தமது தேவனாகிய நேசரை விட்டுவிட்டு பாகால் போன்ற வேறு தெய்வங்களை தெரிந்து கொண்டார்கள் . எனவே அவர்களை விசாரிப்பேன் என்கிறார். இயேசு  கிறிஸ்து அவர்களை  விசாரிப்பதற்கு தான்  கூட்டிக்கொண்டு போகிறார். வனாந்திரம் என்ற வார்த்தை இங்கே பாடுகளையும், சிட்சையையும்  குறிக்கும். இங்கே விசாரணை என்பது தண்டனையை குறிக்கும். அதற்காக தான் நயம் காட்டி வனாந்திரத்திற்கு அழைத்துப் போகிறார்.  

ஆயினும் நான் அவளுக்கு நயங்காட்டி கோபாக்கினையைக் குறித்த எச்சரிப்பையும், நம்பிக்கையையும், மீட்பையும் குறித்த வாக்குத் தத்தத்தையும் கொடுப்பேன் என்று கர்த்தர் கூறியதாக ஓசியா கூறுகின்றான். ஒசியா 2 : 6,7 வசனங்களிலுள்ள "ஆகையால்” என்பது கோபாக்கினையைக் காட்டுகிறது. ஆனால் இங்கே தேவன் ஒரு அற்புதமான வித்தியாசத்தைக் காட்டுகிறார். தமது கிருபையைக் காட்டி மீண்டும் மனந்திரும்ப இஸ்ரவேலரை அழைக்கிறார். எகிப்திலிருந்து இஸ்ரவேலரை வெளியே கொண்டுவந்து வனாந்தரத்தில் அவரது பிரமாணங்களைக் கொடுத்து கானானுக்கு வழிநடத்தினது போல் இக்காலத்திலும் பாவம் என்கின்ற எகிப்திலிருந்து தேவன் அவர்களது பிள்ளைகளை வெளியே கொண்டு வந்து புதிய வனாந்தரத்தில் வழிகாட்டி, போதித்து திரும்பவும் மீட்டுக்கொள்ள விரும்புகிறார்.

ஒசியா 2 : 14,15 இல், கர்த்தர் தமது மக்களை மிகவும் நேசிக்கிறார்  என்பதற்கு இந்தப் பகுதி சாட்சி பகர்கின்றது. பயங்காட்டி அல்ல, நயங்காட்டி அழைக்கிறார். தனியாக அழைத்துக்கொண்டு  செல்கிறார். கோபமாக அல்ல, பட்சமாய்ப் பேசுகிறார். கர்த்தரை விட்டுத் தூரமாகப் போகிறவர்கள் பல வேதனைகளில் சிக்குண்டு அவதியுறும் போது கர்த்தர் மீண்டுமாக அன்போடு அழைப்பார். திரும்பி வருகிறவர்களை மறுபடியும் ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அவருடைய கிருபை வரங்களும், அழைப்பும் மாறாதவையாகும் (ரோம 11 : 28-29). திரும்ப வருவதற்கு மறுத்து, பட்சமாய்ப் பேசுவதை உதறித் தள்ளிவிடுகிறவர்கள் தான் அழிந்து போவார்கள். இவ்வாறு கர்த்தரை விட்டு பின் வாங்கி போனவர்கள், அவருடைய சிட்சையை பெற்று, மறுபடியும் மனம் திரும்பி அவரிடம் வந்து சேர்வதை இந்த வசனம் நமக்கு கூறுகிறது.

"கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள” . கிச்சிலிமரத்தின் கீழ் உம்மை எழுப்பினேன், அதாவது கிச்சிலி மரம் இஸ்ரவேல் நாட்டில் தான் அதிகமாக காணப்படுகிறது. இந்த பழம் இஸ்ரவேல் நாட்டை குறிப்பாக குறிப்பிடுகிறது. அவர்கள் கூறுகிறது என்னவென்றால், என் நேசரே! உமது தாய் உம்மைப் இஸ்ரவேலில் பெற்றாள். அதாவது இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்து எருசலேமுக்கு கொண்டுவரப்பட்டார். இது கிச்சிலி மரம்  அதிகமாய் வளருகின்ற இஸ்ரவேல் நாட்டைக் குறிக்கிறது.

"உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.”  இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நாம் அறிந்து இருக்கிறோம், சத்திரத்தில் இடம் கிடைக்காமல் முன்னணையில் கிடத்தப்பட்டார். அதை கவிதை நடையில் உமது தாய் வேதனையோடு பெற்றாள் என்கிறது இந்த வசனம்.

நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்து வாழ்கிறீர்களா?

குறிப்பு வசனம்: ஆதி 24 : 65, உபா 33 : 2: 3

Loading...