புதிய காரியத்தை செய்யப்போகிறார்
 /   Blog /  Created by Kingslin R Last updated Wed, 16-Jul-2025



புதிய காரியத்தை செய்யப்போகிறார்

சில நேரங்களில் கடந்த நாட்களில் நடந்தவைகளை நினைத்து நினைத்து மிகவும் வேதனையுடனும் கவலையுடனும் சிலர் இருக்கலாம்.  தொடர்ந்து  என்னுடைய வாழ்க்கையில் நான் தோல்விகளையே சந்தித்து வருகிறேனே, என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காதா? நான் எதை எடுத்தாலும் எல்லாம் தடையாகவே இதுவரை இருந்திருக்கிறதே மாற்றம் எதுவும் இருக்காதா? என்று கண்ணீருடனும் கலக்கத்துடனும் நீங்கள் இருக்கலாம்.

இதுவரை உங்கள் வாழ்க்கை எப்படி இருந்ததோ, ஆனால் இந்த செய்தியை " முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’’(ஏசாயா 43:18,-19) என்று கர்த்தர் இப்போது தம்முடைய வார்த்தையின் மூலமாகப்  பேசுகிறார்.

இனிமேல் கடந்து போனநாட்களில் நடந்தவைகளை நினைத்து நினைத்து நீங்கள் கலங்கி நிற்கவேண்டாம். “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்’’ என்று சொன்ன தேவனை நோக்கிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நன்மையாக மாறும்.

ஏற்கனவே நடந்து முடிந்தவைகளை நினைத்து நினைத்து நீங்கள் கண்ணீர் விடுவதினால் எந்த பயனும் நன்மையும் உண்டாகப் போகிறது இல்லை.


நீங்கள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றி இருக்கலாம், நீங்கள் மலைபோல எதிர்பார்த்தவைகள் ஒன்றுமில்லாமல் போயிருக்கலாம். ஆகையால் “என் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து போனது இனி என்க்கு வாழ்வதற்கு எதுவுமே இல்லை’’ என்று விரக்தியடைந்து, மிகவும் சோர்ந்துபோன நிலையில் இந்த செய்தியை நீங்கள்  கேட்கலாம் நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’’ என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.

இதுவரை நீங்கள் நம்பி இருந்தது, மனித பலத்தை மட்டுமே, ஆனால் அவைகள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது என்று அறிந்து கொள்ளும்படியாக இதுவரை நடந்த எல்லா சம்பவங்களும் உங்களுக்கு அறிவித்து விட்டன. ஆனால் இப்பொழுதோ, சுய பலத்தினால் அல்ல, மனித பலத்தினால் அல்ல, தேவனுடைய பலத்தினால்  எல்லாவற்றையும் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் புதிதாக மாற்றப்போகிறார். கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.

இதுவரை மற்றவர்களுடைய வாழ்க்கையில்நடந்த அற்புதங்களை நீங்கள் பார்த்திருக்கலாம், அல்லது கேட்டிருக்கலாம், ஆனால் இப்பொழுது தேவனுடைய அற்புதங்களையும், அதிசயங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் எல்லா வற்றையும் புதிதாக்கி உங்களுக்கு அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்யப்போகிறார்.

கர்த்தருக்கு உண்மையாக சாட்சியாக வாழ இப்பொழுதே உங்களை அர்ப்பணியுங்கள்.

கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் ஒவ்வொருவர்மேலும் தங்கி இருப்பதாக ஆமென்.




  :   1 Likes

  :   7 Views