எபேசியர் 1:4. "அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே,"
தேவன் நம்மை தேவனுடைய பிள்ளைகளாய் இருக்க வேண்டும் என்று இந்த உலகம் உலகத்தோற்றத்துக்கு முன்பே நம்மை தெரிந்தெடுத்து இருக்கிறார். அவர் நம்மைத் தெரிந்து எடுக்கவில்லை என்றால் கல் மனம் படைத்தவர்களால் இருந்திருப்போம். தேவனுடைய சுவிசேஷத்தையோ இரட்சிப்பையோ ஏற்றுக்கொள்ள மறுத்து இருப்போம். நாம் பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்போம்.
ஏனென்றால் அவருடைய கிருபையே அன்றி வேறொன்றும் நம்மை தேவனுடைய பிள்ளைகளாக மாற்ற முடியாது.
இன்று மற்றவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அது பரிசுத்த ஆவியானவருடைய தொடுதலும், இயேசு கிறிஸ்துவின் அன்பும், பிதாவின் திட்டமும் வழிகாட்டுதலும் தான்.
போதகர்கள் அல்லது சுவிசேஷகர்கள் அல்லது ஒரு சாதாரண விசுவாசியின் மூலமாக , பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் வெளிப் படுத்தப்படுகிறார்கள். தேவனுக்கு கீழ்படிக்கிற மனிதர்கள் தேவனுடைய கருவிகளாய் இருந்து, அவருடைய வார்த்தையை அவரை அறியாதவர்களுக்கு போதிக்கின்றனர். ஆனால் அந்த அறியாதவர்களின் மனதில் செயல்படுகிறவர் யார் என்றால், அவர் ஆவியானவர்.
அப்படி என்றால், எவ்வளவு ஒரு பெரிய கிருபையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் கட்டாயம் எண்ணிப்பார்க்க வேண்டும். தேவனை நமக்கு காண்பித்து, இயேசு கிறிஸ்துவை இரத்த பலியாக தந்து, நம்மை பாவத்திலிருந்து இரட்சித்து, பரலோக பாதையைக் காட்டிய தேவனை, நாம் ஸ்தோத்தரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
Write a public review